புதிதாய் எழுகிறது 'தேசம்'... மாதத்தில் ஒரு நாள் அச்சில், கனடாவிலிருந்து...
இணையத்தில்
தினமும், உலகெங்கும்... அரசியல், சமூகம், வரலாறு, கலை, இலக்கியம் இன்னும் பல விடயங்களைத் தாங்கி....

More
  • E-PAPER

Latest Posts

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் 06 நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு— (கனகராசா சரவணன்)

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் 06 நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

(கனகராசா சரவணன்) 

06 வெளிநாடுகளின் தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு 06-03-2024  புதன்கிழமை (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது


பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி ணுராயசை ஆ.ர். னுயச ணுயனை துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி சு. னுநஅநவ ளுநமநசஉழைபடர, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் வுயசநங ஆ.னு. யுசகைரட ஐளடயஅ, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி னுநறi புரளவiயெ வுழடிiபெ  மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல். ர்நசர Pசயலவைழெ மலேசிய உயர்ஸ்தானிகர் டீயனடi ர்iளாயஅ டீin யுனயஅ மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி குயவாiஅயவா புhiயெ ஆகிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ;வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியேர் கலந்து கொண்டனர்.
.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இராஜதந்திரிகள் விழிப்புணர் வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.


—–வெளிநாட்டு தூதுவர்களின் பெயர் விபரம்—–
(((பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி  R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர்  திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி  Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் திரு. Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் திரு.  Badli Hisham Bin Adam  மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவம்செய்து இந்த சந்திப்பில் பங்கேற்றனர். ))))
Video Player

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.