பொதுச் செய்திகள் · August 27, 2026

இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!

இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!

இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.​

ஜூன் 2026 வரையிலான ஒரு ஆண்டில் அகதி உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்து 86,000 ஆகப் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!

இருப்பினும், இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய சாதாரண அளவை விட அதிகமாகவே உள்ளது

சிறிய படகுகள் 

அதேபோல், சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்தவர்களின் எண்ணிக்கையும் 23 சதவீதம் குறைந்து 33,000 ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் எரித்திரியா, சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

அகதிகளுக்கான விடுதி பயன்பாடும் பாதியாகக் குறைந்துள்ளது, கடந்த ஜூன் மாத நிலவரப்படி, சுமார் 16,000 அகதிகள் மட்டுமே விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.​

கன்சர்வேடிவ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளின் காரணமாக வேலை, கல்வி மற்றும் குடும்ப விசாகளின் எண்ணிக்கையும் சரிவடைந்துள்ளது.​

இந்தத் தரவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், அரசாங்கம் இதில் திருப்தியடைந்து விடவில்லை இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.​

அதேவேளை, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் அகதிகள் மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து முடிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இடம்பெயர்வு கண்காணிப்பகம் (Migration Observatory) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News