Home சமுகம் தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள மகளீர் தினம்

தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள மகளீர் தினம்

0

தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள மகளிர் தினம்

பு.கஜிந்தன்

ஈழப் பெண்களும் இனியொரு பலம் எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள  மகளிர் தினம் இன்று கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் மாதர் முன்னணியின் தலைவி முறாளினி  தினேஸ் தலைமையில் நடைபெறுகின்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக சட்டத்தரணி விஜயராணி சதீஸ்குமார் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான், சசிகலா ரவிராஜ், கொழும்பு கிளையின் மகளீர் அணி தலைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொடியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றி வைக்க சத்தியப் பிரமானம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப் மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version