Home சமுகம் இயற்கைச் சூழல் மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர பல தேசிய கம்பனிகளிடம் அல்ல – சமூக...

இயற்கைச் சூழல் மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர பல தேசிய கம்பனிகளிடம் அல்ல – சமூக செயற்பாட்டாளர் செல்வின்

0

இயற்கைச் சூழல் மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர பல தேசிய கம்பனிகளிடம் அல்ல – சமூக செயற்பாட்டாளர் செல்வின்

பு.கஜிந்தன்

இயற்கைச் சூழல் மக்களிடம் இருக்க வேண்டுமே தவிர பல் தேசிய கம்பனிகளிடம் அல்ல – சமூக செயற்பாட்டாளர் செல்வின்

மனிதன் வாழ்கின்ற இயற்கை சூழல் மக்களின் கட்டுப்பாட்டுகள் இருக்க வேண்டுமே அல்லாமல் பல்தேசிய கம்பனிகளிடம் இருப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என சமூக செயற்பாட்டாளரும் மூத்த நிர்வாக அதிகாரியுமான செல்வின் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர் அமைப்புகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்களின் கடல் சூழல் பல்தேசிய கம்பனிகளிடம் தாரை வார்க்கும் செயற்பாடானது மீனவ மக்களின் வாழ்வியலை கடல் சூழலில் இருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடாக அமைகிறது.
யாழ்ப்பாண குடா கடலின் வெளிப்புறம் பாக்கு நீரிணையாகக் காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண குடாக்கடலின் பல இடங்களில் பாலங்கள் மற்றும் சிறிய மதகுகள் இடப்பட்டு இயற்கை நீரோட்டங்கள் மறிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக யாழ்ப்பாண குடா கடலை நம்பி வாழ்கின்ற சிறு மீன்பிடியாளர்களின் வாழ்வியல் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதுடன் சிறு கடல் தொழில் வேளாண்மை அழிக்கப்பட்டு வருகிறது.
மனிதன் நிலத்தில் வேட்டையாடிய பின்னர் கடலில் வேட்டையாடினான் தனக்கென ஒரு இடம் வேண்டும் என்பதற்காக கடற்கரையோரமாக தனது குடியிருப்புகளை ஆரம்பித்தான்.
இலங்கையில் 50 விதமான புரதம் கடல் உணவில் இருந்து பெறப்படும் நிலையில் யாழ்ப்பாண குடாவில் நீர் வேளாண்மை என்ற பெயரில் கடல் அட்ட பண்ணைகள், பாசி வளர்ப்புக்கள் திணிக்கப்பட்டு வருகிறது.
அட்டப்பண்ணைகளால் வருமானம் அதிகரிக்கும் அந்நிய செலாவணியை பெறலாம் என்ற கருத்து மேலோங்கி இருக்கின்ற நிலையில் அதனை நானும் மறுக்கவில்லை.
எமது  உணவுத்தட்டில் கடல் அட்டை இல்லாத  இல்லாத நிலையில் நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு அப்பால் இந்த வர்த்தக நீதியான துறை தோற்றுப் போனால் பாரம்பரிய மீன்பிடியை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன என்பதை எவராலும் கூற முடியுமா?
பல்தேசிய கம்பெனிகளின் வருமான மார்க்கத்திற்காக எமது வளங்களை விட்டுவிட்டு பல்தேசிக் கம்பெனிகளின் விநியோக சங்கிலி தோற்றுப் போனால் மீண்டும் கடல் மீன் பிடியில் மீன்பிடி சமூகம் இறங்குமா! என்ற கேள்வி காணப்படுகிறது.
எமது கடலில் இயற்கையான கடல் அட்டை காணப்படுகிறது அதனை மீனவர்கள் பிடித்து விற்பனை செய்கிறார்கள் ஏன் செயற்கையான முறையில் வளர்த்து அட்டைகளை கடலில் விட வேண்டும்.
இலங்கையின் பலமான 1330 கிலோமீட்டர் கடற்பரப்பில் 800 கிலோமீட்டர் கடற்பரப்பு வடக்கு கிழக்கில் காணப்படும் நிலையில் அதற்க்குள் அட்டைப் பண்ணைகளை அமைத்து இடையூறு செய்யக்கூடாது.
ஆகவே எமது கடற் தொழில் சமூகத்தையும் அவர்களின் மீன்பிடி முறைகளையும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்றால் கடலை சுதந்திரமாக சுவாசிக்க விட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version